இடுகைகள்

வாக்களித்தோம்; காத்திருப்போம்.

படம்
எனது வாக்கைச் செலுத்துவதற்கு ஒருமணி நேரம் காத்திருக்க வேண்டியிருந்தது. நடந்து சென்று வாக்களிப்பது என முடிவு செய்ததால் காலையில் நடக்கவில்லை. அரை கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும் அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு நடந்தபோக 15 நிமிடம் ஆகும். ஒன்பது மணிக்குக் கிளம்பி 09.15 க்கு வரிசையில் நின்று வாக்களித்துவிட்டு வெளியேறிய போது மணி 10.12. நாம் அளித்த வாக்கு யாருக்குப் போகிறது என்பதைக் காட்டும் ஏற்பாடும் இருக்கிறது.

ராகுல் காந்தி என்னும் நிகழ்த்துக்கலைஞர்

படம்
ஒரு அரங்கியலாளனாகவும் அரசியல் விமர்சகனாகவும் ராகுல்காந்தியைத் தொடர்ந்து கவனிக்கிறேன். அரசியல் கட்சி ஒன்றின் முன்னணித் தலைவராக அவரது பேச்சுகள் அரசியல் சொல்லாடல்களாக இருக்கின்றன. அந்தச் சொல்லாடல்கள் இப்போதிருக்கும் ஆட்சியாளர்களின் இறுக்கமான சித்தாந்தம், செயல்பாடுகள், மறைமுக நோக்கங்கள், எதிர்மறைச் சிந்தனைகள் போன்றவற்றை விவாதிப்பதற்கு முன்னுரிமை கொடுத்து அம்பலப்படுத்துகின்றன. ஊழல், வாரிசு அரசியல் போன்றவற்றைப் பேசுவதற்கான திட்டங்களைத் தீட்டித்தரும் ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக் அமைப்பையும், அதன் தலைமைப்பீடத்து மனிதர்களையும் நேரடியாகக் கைகாட்டுகின்றார். அப்படித்தான் அவரது பேச்சுகள் அமையவேண்டும் என்பதைத் திட்டமிட்டே செய்கின்றார்.

ஆர். எம். வீரப்பன் -ஒரு நினைவுக்குறிப்பு

படம்
தமிழ்நாட்டின் வெகுமக்கள் மனப்போக்கைத் தீர்மானிக்கும் சினிமாவையும் தேர்தல் அரசியலையும் தனது இணை நேர்கோடுகளாகக் கொண்டு வாழ்ந்த ஆளுமைகளில் ஒருவர் ஆர். எம் .வீரப்பன். இவ்விரு கோடுகளில் தனித்தனிப்பாதையில் பயணித்தாலும், இரண்டுக்குள்ளும் ஒட்டியும் வெட்டியும் பயணம் செய்ததாகவும் அவரது வாழ்க்கையின் முடிச்சுகள் இருந்தன.

அரசியலை நிகழ்த்துதல்

படம்
மதுரை நாடாளுமன்றத்தொகுதியில் சாகித்திய அகாதெமி விருதுபெற்ற எழுத்தாளர் சு.வெங்கடேசன் திரும்பவும் வேட்பாளர்.

பெண் எழுத்து - பெருவெளி

படம்
  புதியமாதவி , மும்பை .       பெண்களுக்கு எழுதுவதற்கு என்ன இருக்கிறது ? கைப்பிடித்த கணவனின் பிரதாபங்களை எழுதுவதைத் தவிர .   காலை முதல் இரவு வரை அவள் வாழும் சமையலறையின் சமையல் குறிப்புகளை பெண்கள் எழுதலாம் . குழந்தை வளர்ப்பு எழுதுவது தாய்மையின் வரப்பிரசாதம் . நவீன நாகரீகப் பெண்மணியா .., அப்படியானால் , அவள் அழகுக்குறிப்புகளை எழுதலாம் . ஓய்வான நேரம் வாய்த்தால் உங்கள் பூ பின்னல் கலைகளைப்   பதிவிடலாம் . உங்கள் கலை உள்ளத்தை வெளிப்படுத்த கோலம் வரையலாம் . இப்படியாக பெண்கள் எழுதலாம் . இப்படியாகத்தான்   பெண்கள் எழுத வேண்டும் என்பதே இன்றும் கூட “ பெண்கள் சிறப்பிதழ்கள் ” மற்றும் ‘ மங்கையர் மாத இதழ்கள் ’ களின் அடிப்படை அம்சங்கள் . இதைத்தாண்டி ஆண்டுக்கு ஒருமுறை வந்துப்போகும் மகளிர் தினத்தில் ( மார்ச் 08) பெண்களின் உரிமைகள் என்று முழங்கி தொண்டை வறண்டு மீண்டும் பழைய வாழ்க்கைக்குள் பத்திரமாக ஒதுங்கிவிடும் பெண்ணுலகம் .

எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே; ஆனால்….

மனிதத் தேடலின் முதன்மையான நோக்கம் இந்த உலகத்தை விளங்கிக் கொள்வதாக இருக்கின்றது. மனிதர்களே உலகம் என நினைப்பவர்கள் மனிதர்களின் இருப்பையும் செயல்களையும் காரணங்களையும் பின்னணிகளையும் விளங்கிக் கொள்வதே போதுமானது என நினைக்கிறார்கள். உலகம் மனிதர்களுக்காக மட்டுமே உருவாக்கப்பட்டதல்ல என நினைப்பவர்கள் ஓரறிவு உயிர் தொடங்கி ஆறறிவு மனிதர்கள் வரை இந்த உலகத்தில் இருப்பதின்- இயங்குவதின் காரணிகளை விளங்கிக் கொள்வதே அறிவு என நம்பித் தேடுகிறார்கள். தனக்கு அறிமுகமான இந்த உலகம் மட்டுமே விளங்கிக் கொள்ள வேண்டிய ஒன்று என்பதையும் தாண்டி நிலம் நீர் காற்று நெருப்பு வானம் என ஐம்பரப்புகளும் விளங்கிக்கொள்ள வேண்டியனவாக இருக்கின்றன என்ற விரிதலின் விளைவாக அறிவுத்தோற்றம் எல்லையை விரிக்கிறது. அப்போது உலக அறிவு, பிரபஞ்சம் பற்றிய அறிவாக விரிகின்றது.

தேசியம் - தேர்தல்

நடந்து முடிந்த நாடாளுமன்றத்தேர்தலில்(2019)மொத்த வாக்காளர்களில் 1.6 கோடிப்பேர் வாக்களிக்கவில்லை. கடந்த தேர்தலில் வாக்களித்தவர்களைவிட 2 சதவீதம் குறைவு இந்த முறை. இதற்கான காரணம் என்னவாக இருக்கும் என்று புதிய தலைமுறை இதழாளர் என்னிடம் கேட்டார். அப்போது சொன்ன பதில் இப்போதும் பொருந்தக்கூடிய ஒன்றுதான்.